
நேற்று அமீரகத்தில் பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணையின் படி இனி ஊழியர்களுக்கு சம்பளம் தர தாமதித்தால் நிறுவனங்கள் பல்வேறு சட்டபூர்வ தண்டனைகளை சந்திக்க நேரிடும் அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களுடைய புதிய பெர்மிட் (விசா) அனுமதிகள் அனைத்தும் சம்பள வழங்க தாமதமான 16வது நாளில் இருந்து நிறுத்தப்படும்.
மாதாந்த சம்பள நாளிலிருந்து தாமதமாக 1 மாதம் வரை சம்பளம் தர இழுத்தடிக்கும் நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் குறித்த தகவல்கள் அமீரக நீதித்துறைக்கும் பிற அரசுசார் ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்கும் தெரிவிக்கப்படும்.
இதன்வழி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயரிலுள்ள பிற நிறுவனங்களின் அரசு தொடர்புடைய செயல்பாடுகளும் சேர்த்து முடக்கப்படுவதுடன் புதிய நிறுவனங்களை தொடங்கவும் அனுமதியளிக்கப்பட மாட்டாது.
மேற்படி தண்டனைகளுக்குப் பிறகும் சம்பள தாமத விவகாரத்தை சரி செய்யாமல் இழுத்துக் கொண்டே செல்லும் நிறுவனங்களின் வங்கி உத்தரவாத தொகையை கொண்டு சம்பளப் பிரச்சனை சரிசெய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மூன்றாம் தர நிறுவனமாக தரம் இறக்கப்பட்டு, அதன் ஊழியர்கள் பிற வெளி நிறுவனங்களில் பணியில் சேர்ந்து கொள்ள அனுமதியளிக்கப்படுவர்.
60 நாட்களுக்கு மேல் சம்பளம் தரப்படவில்லை என புகார் தெரிவிக்கும் ஒவ்வொரு ஊழியர்களின் தனித்தனி புகாரின் மீதும் குறைந்தபட்சம் 5,000 திர்ஹம் முதல் அதிகபட்சம் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பிடியை மேலும் இறுக்கியுள்ளது.
தாமதமான முழு சம்பளத்தையும் ஒரு மாதத்திற்குள் அனைத்து ஊழியர்களுக்கும் பட்டுவாடா செய்யும் நிறுவனங்களின் புதிய பெர்மிட் தடைக்காலம் விலக்கிக் கொள்ளப்படும் என்றாலும் 60 நாட்களுக்கு மேல் தாமதம் செய்யும் நிறுவனங்களின் தடையை விலக்கிக் கொள்ள அவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையாக சம்பளம் கொடுத்து முடிக்க எடுத்துக் கொண்ட கால அளவு இரட்டிப்பாக கணக்கிடப்பட்டு அதுவரை காத்திருக்க நேரிடும்.
சம்பளம் தாமதம் செய்யும் 100 ஊழியர்களுக்கு குறைவாக பணிபுரியும் நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களான விசா தடை, அபராதம் மற்றும் பொது விசாரனைக்கு உத்தரவிடுதல் போன்றவை தொடருமென்றாலும் ஒரே வருடத்தில் இருமுறை 60 நாட்கள் வரை சம்பளம் தர தாமதித்தால் 100 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கான புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் WPS (Wage Protection System) எனும் சம்பள பாதுகாப்பு ஒழுங்குமுறை (வங்கிக் கணக்குகள் வழியாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு அதன் விபரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு செல்லும்) திட்டத்தில் இதுவரை இணையாத அனைத்து நிறுவனங்களுடனும் அலுவல்ரீதியான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் எனவும் புதிய ஆணை தெரிவித்துள்ளது.
Source: Khaleej Times
Dated: 27-07-2016
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.