தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 343 ரண்கள் குவித்தனர். இந்த அதிகபடியான இலக்கை அடைய மிக முக்கிய காரணம் அந்த அணியின் துவக்க மட்டையாளர் ஹாஷிம் அம்லாவின் சதம் ஆகும். அவர் 99 பந்துகளில் 110 ரண்களை குவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரண்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக தப்ரைஸ் சம்சி 2 விக்கெட்டுகளையும் வெய்ன் பார்னல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாஷிம் அம்லா, இம்ரான் தாஹிர், ஷம்ஷி, பார்னல் ஆகிய அனைத்து வீரர்களும் இஸ்லாமியர்கள். இவர்கள் நால்வரும் நோன்பிருந்த வாறு நேற்றைய போட்டியில் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோன்பிருப்பது உடலுக்கு பலவீனம் தரும் என்று சிலர் எதிர்கருத்து பேசிவரும் நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகள் நோன்புக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த வீரர்கள் நோன்பிருப்பது பலவீனமில்லை, பலம் என்று நிருபித்துள்ளனர்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
thanks - adiraipirai
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.