

வியட்நாமிலுள்ள, ’க்வாங் நாம்’ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2003ல் தன் மனைவியை இழந்த சோகம் தாளாமல், தினந்தோறும் மனைவியின் கல்லறையைக் கட்டித் தழுவியபடியே உறங்கி வந்திருக்கிறார் லீ வான்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தன் மனைவிக்கும் தனக்கும் இடையே கல்லறைத் தடுப்பாய் இருப்பதாக உணர்ந்த லீ வான், கல்லறையின் பக்கவாட்டில் ஒரு சுரங்கம் போல் தோண்டி உள்ளே சென்று உறங்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரைத் தடுத்துள்ளனர்.
”அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்” என்பதற்கிணங்க, நவம்பர், 2004 ல் தன் மனைவியின் கல்லறையைத் தோண்டி, சடலத்தை வெளிக்கொணர்ந்தார், லீ. அச்சடலத்தின் மீதமிருந்த உறுப்புகளையெல்லாம் ஒன்றுதிரட்டி அவற்றின் மேல் நெகிழிப் பொம்மையைப் போல் ஒரு சட்டம் அடித்து அதைத் தைத்த லீ, அந்த பொம்மைக்கு தன் மனைவியின் உடைகளை அணிவித்து, தன் படுக்கையில் கிடத்திவைத்திருக்கிறார்.
மேலும் ஒரு அழகிய பெண் பொம்மையின் முகமூடியையும் அந்தச் சடலக்குவியலாலான பொம்மைக்கு அணிவித்த லீ, 2004ம் ஆண்டிலிருந்து இன்று வரை அந்தப் பொம்மையைக் கட்டிப் பிடித்தவாறே உறங்குகிறார் லீ வான்.
இது குறித்து, வியட்நாமிலுள்ள நாளிதழான ‘லா ஒ டாங்’, லீ வானை அணுகியபோது அவர், “நான் வித்தியாசமானவன்; மற்றவர்களைப்போல் எதையும் செய்ய மாட்டேன். என் மனைவியின் உடல் மட்டுமே இறந்துபட்டது. அவர் ஆன்மா எங்களுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே அவளது சடலத்துடன் வாழ்வதில் எனக்கு எந்த பயமுமில்லை.” என்று அந்த பொம்மையைத் தழுவியபடி பேட்டி அளித்திருக்கிறார்
காதலுக்கு கண்ணில்லை என்றாலும், காற்றுக்கு மாசு அபாயம் உண்டென்பதால், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாக, ‘க்வாங் நாம்’ சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.