2/3/16

தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதிமுக அகற்றுவதை முக்கியமான வேலை என்று சொல்லும் மக்கள் நலக் கூட்டணியின் முடிவை சொன்னார் பேரா. அருணன். அதற்கு சீமான் இதெல்லாம் ஒரு வேலையா? அவர்களோடுதானே மாறிமாறி கூட்டணியில் இருந்தீர்கள். பகுத்தறிவு பாதையில் போன பயணம் சினிமா பக்கம் திரும்புது என்று பாடிய கம்யூனிஸ்டுகள், இப்போது ஒரு சினிமாக்காரர் பின்னால் போகிறார்கள் என விமர்சனம் வைத்தார். அதற்கு அருணனும் விளக்க அளித்துக்கொண்டிருந்தார்.

பிறகு, “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் பேசினார். அதற்கு அருணன் விளக்கம் கொடுத்தார், இடைமறித்த சீமான், “நீங்கள்லாம் கம்யூனிஸ்டா, கம்யூனிஸ்டா என்று திரும்பத் திரும்ப கேட்டார்.

உங்களுக்கு கொள்கை இல்லை. தத்துவம் இல்லை, நோக்கம் இல்லை என்றும் பேசினார்.
கோபமடைந்த அருணன், பெரியாரைப் பற்றி தவறாகப் பேசிய நீங்கள், கொள்கை கூட்டணிக் குறித்து பேசக்கூடாது என்று சொல்லவே இடைமறிக்க முற்பட்டு முடியாமல் போன சீமான், “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்காத நிகழ்ச்சி நெறியாளர் பாண்டே, சீமானின் செயலை நியாயப்படுத்திப் பேசினார். வானதி ஸ்ரீனிவாசன் இறுதியில் பேரா.அருணனை அமைதியாக இருக்கும்படி சொன்னார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.