"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/3/16


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி தேர்தல் அட்டவணை:
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
ஏப்ரல் 22
மனு தாக்கல் கடைசி நாள்
ஏப்ரல் 29
வேட்பு மனு மீது பரிசீலனை
ஏப்ரல் 30
மனு வாபஸ் பெற கடைசி நாள்
மே 2
தேர்தல் வாக்குப்பதிவு
மே 16
வாக்கு எண்ணிக்கை
மே 19
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேர்தல் தேதியை அறிவித்து அவர்கள் கூறியதாவது:
5 மாநிலங்களில் மொத்தம் 824 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு:
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே-16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 22-ல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 29-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 30-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் மே 2. தொடர்ந்து மே 16-ல் வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
அசாம்:
அசாமில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக 65 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்குவங்கம்:
மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவே இரண்டு நாட்கள் நடைபெறும். அதாவது ஏப்ரல் 4-லும், ஏப்ரல் 11-ல் வாக்குப்பதிவு நடைபெறும்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 52 தொகுதிகளுக்கு 17 ஏப்ரலில் வாக்குப்பதிவு நடைபெறும்.
3-ம் கட்ட வாக்குப்பதிவு 62 தொகுதிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறும்.
4-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும்.
5-ம் கட்ட வாக்குப்பதிவு 53 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும்.
கடைசி மற்றும் 6-ம் கட்ட வாக்குப்பதிவு 25 தொகுதிகளுக்கு மே 5-ம்தேதி நடைபெறும். கூச்பிஹாரில் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளா:
கேரளாவில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். 148 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும மே 16-ம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே-19-ல் வாக்கு எண்ணிக்கை:
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே-19-ல் எண்ணப்படுகிறது.
தேர்தல் முன்னேற்பாடுகள்:
5 மாநிலங்களிலும் தரைத்தளங்களிலேயே வாக்குச்சாவடியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாளச் சீட்டு விநியோகத்தை மத்திய தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும். தேர்தலின்போது வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் கருவி வசதிகளுடன் பறக்கும் படை அமைக்கப்படும்.
நோட்டாவுக்கு தனி சின்னம்:
வாக்குப்பதிவு இயந்திரத்திரத்தில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நோட்டா என்பது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட முறை.
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.