"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/3/15

நாவின் பத்தினித்தனம் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும்.

வாய்முடி இருப்பது இஸ்லாத்தின் தலை போன்றதாகும்.
ஈமானின் பக்தர்களுக்கு இறைநேசமும் கிரீடமும் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும்.
ஒரு ஆலிம் மார்க்க விஷயத்தில் மெளனமாய் இருப்பது குற்றமாகும். அவர் பேசுவது சிறப்பாகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் நாவைப் பிடித்து கொண்டு இதை (தீயவழியில்) உபயோகிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். -அல் ஹதீஸ்

உங்களில் அளவுக்கு அதிகமாக பேசுவோனும், வீண்பேச்சுப் பேசுவேனும், தற்பெருமையாகப் பேசுவேனும், வளவளப்பாகப் பேசுவேனும் என்னால் வெறுக்கப்பட்டவன், கியாமத்து நாளையில் அவன் என்னிடமிருந்து வெகு தூரத்தில் இருப்பான். -அல் ஹதீஸ்

வளவளப்பாக பேசுவோனையும், பசுவைப் போன்று தனது நாவை இயக்குவோனையும் ஆண்டவன் வெறுகிறான். -அல் ஹதீஸ்

மக்களுடைய மனதை கவரச் செய்யும் நோக்கத்துடன் தன் வார்த்தைகளை அடுக்கி மாற்றி (உண்மைக்குப் புறம்பாக) பேசுவோனுடைய தவ்பாவை -பச்சாத்தாப்பத்தை கியாமத் நாளில் இறைவன் ஏற்று கொள்ளமாட்டான். -அல் ஹதீஸ்

மெளனமாயிருப்பதால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கண்ணியமானது. அறுபது ஆண்டு வணக்கத்தை விட மேலானது. -அல் ஹதீஸ்

இறைவன் மீதும் கியாமத் (மறுமை நாள்) மீதும் நம்பிக்கை தரக்கூடிய நல்லதையே மனிதன் பேசுவானாக அல்லது மெளனமாக இருப்பானாக. -அல் ஹதீஸ்

அதிகமாக பேசாதீர், மெய்யாகவே, இறைவனை நினையாமல் அளவுமீறிப் பேசுவது (உங்களை) கல்நெஞ்சராக்கி விடும். மெய்யாகவே, இறைவனிடத்திலிருந்து வெகுத்தூரம் விலக்கப்பட்டவன் கல்நெஞ்சுள்ள மனிதனேயாகும். -அல் ஹதீஸ்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.