"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
1/7/14

லட்சக் கணக்கான பெண்கள் பல சமயங்களில் சிறுநீர் வருவதை அடக்க முடியாமையால் அவதிப்படுகிறார்கள் வயாதானவர்களில், மூன்றில் ஒருவர் இந்த சிறுநீர் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். சில பெண்களுக்கு, தும்பினாலே சிறுநீர் கசியும். சிரித்தால் சிறுநீர் சிந்தும். அடக்க முடியாமல் பெருமளவில் சிறுநீர் போகும்.குளிர்காலத்தில் இந்த உபாதை அதிகமாகும். சமூகத்தில், பொது இடங்களில், சிறுநீர் வருவதை அடக்க முடியாமல் போனால், தர்மசங்கடமான நிலைமையால் பெண்கள் தவிப்பார்கள். மனரீதியான பாதிப்புகள் உண்டாகும். வெளியே போவதற்கே அஞ்சுவார்கள். நிம்மதியாக சமூக செயல்பாடுகளில் ஈடுபடமுடியாது. மனச்சோர்வு ஏற்படும்.

இந்த உபாதையை கட்டுப் படுத்தலாம், குணப்படுத்துவது கூட முடியும். கூச்சத்தினாலும், இது சாதாரண வயதாகினால் வரும் கோளாறு என்று எண்ணுவதாலும், பெரும்பாலான பெண்கள் டாக்டர் உதவியை நாடுவதில்லை.ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு அதிகமாக பாதிப்படைகின்றனர் சிறுநீர் கட்டுப்பாடின்மையை கவனிக்காமல் விட்டால் பல சிக்கல்கள் ஏற்படும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொற்றுகள் ஏற்படலாம். உடலில் சினப்புகள், கட்டிகள் உண்டாகலாம். சிறுநீர் தோலுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
சிறுநீரை கட்டுப்படுத்தல்
சிறுநீரகம் உற்பத்தி செய்யும் சிறுநீர், இரண்டு குழாய்கள் மூலம் சிறுநீர் பையை வந்தடையும். சிறுநீர்ப்பை சிறுநீரை சேமித்து வைக்கிறது. சிறுநீர் பையின் கழுத்து, ஒரு சுருக்குப்பை போன்ற தசையால், மூடவும், திறக்கவும், முடியும். சிறுநீர்ப்பை நிரம்பியதும், நரம்புகள் மூலம் தண்டுவடத்திற்கு செய்தி செல்லும். மூளை உடனே சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதலை உண்டாக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்து சிறுநீர் உடனே கழிப்பது அல்லது சிறிது நேரம் அடக்கிக்கொள்வது நடக்கும்.
சிறுநீர் உடனே கழித்தால் பையின் கழுத்து தசை விரிந்து சிறுநீரை சிறுநீர் தாரை வழியே வெளியேற்றும் சிறுநீர் பையின் தசைகளும் சுருங்கி, விரிந்து இதற்கு உதவும். இந்த செயல்பாடுக்காகவே சிறுநீர்ப்பை “பலூன்” போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
சிறுநீர் கட்டுப்பாடின்மையின் காரணங்கள்
வயது ஏற, ஏற, உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சிறுநீர்பையின் தசைகள் பலவீனமடைந்து, அதில் சேமிக்கப்படும் சிறுநீரின் அளவு குறையும். சிறுநீரை அடக்கிக் கொள்ளும் திறமை குறையும். சிறுநீர்ப்பையை முழுவதும் வெளியேறாமல், எப்போதும் சிறிதளவு சிறுநீர், பையில் தங்கிவிடும். பெண்களின் நீர்த்தாரை லைனிங் நலிவடையும். சிறுநீர்ப் பையில் எப்போதுமே தசை அசைவுகள் (மூளையிலிருந்து கட்டளை வந்தாலும், வராவிட்டாலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இளவயதில் இந்த தசை அசைவுகளை, சிறுநீர் கழிக்கும் தேவை இல்லாத போது, மூளை, தடுத்து வைக்கும். வயதானால் இந்த தடுக்கும் தடவைகள் குறைந்து போகும். எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு உண்டாகும். சிறுநீர்ப்பையின் கழுத்து தசைகள் சரிவர மூடிக்கொள்ளும் பலத்தை இழக்கும்.
வயதானதால் தோன்றும் மாற்றங்கள் தனியாக பாதிப்புகளை உண்டாக்காது அவை ஏற்படுவதற்கு துணை போவது சில மருத்துவ பாதிப்புகளாகும். பக்கவாதம், கருப்பப்பை நீக்கம், இடுப்பெலும்பு முறிவுகள், இதர அறுவை சிகிச்சைகள், நீரிழிவு நோய், உயர்ரத்த அழுத்தம் இவைகளும் சிறுநீர் கட்டுப்பாடின்மையை தோற்றுவிக்கும்.
அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் வரும் பாதிப்புகள், மெனோபாஸ்.
புகைபிடிப்பது
அதீத உடல் எடை, பருமன்
மலச்சிக்கல்
சிறுநீர்ப்பையை பாதிக்கும் தொற்று நோய்கள், மற்றும் பிறப்புறுப்புகளின் ஏற்படும் தொற்று.
சிறுநீர் கட்டுப்பாடின்மையின் வகைகள்
அறிகுறிகளை பொருத்து, ஐந்து வகைகளாக சொல்லாம்.
அடக்கமுடியாத நீர்க்கசிவு – திடீரென்று தோன்றும் தீவிரமான, அடக்க முடியாத சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றி, சிறுநீர் வெளியேறுதல். பாத்ரூமை நோக்கி ஒடுவதற்குள் நீர் கசிந்து விடும். அல்சீமர் மறதி வியாதி நோய், பார்கின்ஸன் நோய், பக்க வாதம் போன்ற நரம்பு நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். சிறுநீர்ப்பையின் அதீத செயல்பாடுகள், முறையற்ற நரம்பு செய்கைகள் – காரணங்களாகும். தண்ணீரை தொட்டால், தண்ணீரால் கை கால்கள் கழுவினால், ஏன், தண்ணீர் ஓடும் சப்தத்தை கேட்டாலே சிலருக்கு உடனே சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். நரம்பு பாதிப்புகள் இந்த நிலைக்கு காரணம்.
ஒரு நாளுக்கு 7 தடவை சிறுநீர் கழிப்பது சில பெண்மணிகளுக்கு நார்மல் பழக்க மென்றால், இந்த பாதிப்பு உள்ளவர்கள் 7 தடவைகளை விட பலமடங்கு அதிகமாக பகலில் 8 (அ) 9 தடவை தவிர இரவில் 2 (அ) 3 முறை சிறுநீர்கழிப்பார்கள். ஒவராக சிறுநீர்ப்பை சிக்னல் கொடுப்பது, அதன் தசைகளை, நரம்புகள் நலிவடைந்திருப்பதின் அறிகுறிகள் ஆர்த்தரைடீஸ் வியாதியும் காரணமாகலாம்.
அழுத்த நீர்க்கசிவு – இருமினால், தும்மினால், சிரித்தால், வேறு சில அசைவுகளால் சிறிதளவு சிறுநீர் தானாக சிந்துவது அழுத்த நீர்கசிவாகும். மெனோபாஸ், பெண்களின் பிரசவ காலங்களில் ஏற்படும். சிறுநீர்ப் பையின் சுற்றியுள்ள தசைகள் வலுவிழந்து போதலும் காரணமாகும். மூடி, திறக்கும் சிறுநீர்பையின் கழுத்து சிதைந்து சரிவர திறந்து மூடாமல் போயிருக்கலாம்.
எஸ்ட்ரோஜன் பெண் ஹார்மோன், மெனோபாஸ் ஏற்பட்ட பெண்களில் குறைந்து விடும். இதனால் யூரின் கட்டுப்படாமல் போகும். குண்டானவர்களின் அடிவயிற்று தசைகள் சிறுநீர்ப்பையை அழுத்திக் கொண்டேயிருக்கும். இதனாலும் நீர்க்கசிவு உண்டாகும். அடிக்கடி குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள், இடுப்புப் பகுதியில் அடி அல்லது காயம் அடைந்தவர்கள், பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கட்டுப்பாடற்ற நீர்க்கசிவு ஏற்படும்.
நிரம்பி வழியும் நீர்க்கசிவு – இந்த வகை சிறுநீர் கட்டுபாடின்மை பெண்களை பாதிப்பது குறைவு. சிறுநீர்ப்பை தசைகளின் பலவீனம், நரம்பு பாதிப்புகள், டயாபடீஸ், ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும் இது ஏற்படும்.
செயல்பாடுகளால் வரும் நீர்க்கசிவு – சில உடலியல் மருத்துவ பாதிப்புகளால் உண்டாகும் சிறுநீர் கட்டுபாடின்மை. உடலுறுப்புகளின் பாதிப்பினால் சக்கர வண்டியைகளை பயன்படுத்துபவர்களுக்கு பாத்ரூம் ஒடுவது சாத்தியமில்லாமல் போகலாம். ஆர்த்தரைடீஸ், அல்சீமர் வியாதி உள்ளவர்களுக்கும் இது ஏற்படும்.
தற்கலிகமான நீர்க்கசிவு – ஜலதோஷம், இருமல், சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று நோய்கள், மருந்துகள், நடமாட்டம் இல்லாமை, மலச்சிக்கல் இவற்றை சிறுநீர் கட்டுபாடின்றி போகும். இந்த நோய்கள் குணமானதும், நீர்க்கசிவு நின்று விடும். சிலருக்கு மேற்சொன்ன கோளாறுகள் ஒன்றுக்கு இரண்டாக சேர்ந்தும் ஏற்படலாம்.
சிறுநீர் கட்டுபாடின்மைக்கு காரணமாகும் சில மருந்துகள்
டிப்ரெஷனுக்கு கொடுக்கப்படும் மருந்துகள், மனோ வியாதிக்கான மருந்துகள், சிறுநீர் பெருக்கிகள், மனதை சாந்தப்படுத்தும் மருந்துகள் அலர்ஜி மருந்துகள் முதலியன.
சில சிகிச்சை முறைகள்
சிறுநீர்பையின் செயல்பாடுகளை நோயாளிக்கு சொல்லித் தர வேண்டும்.இரண்டு (அ) மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழித்து சிறுநீர்ப்பையை கூடிய மட்டும் காலியாக வைத்திருக்க முயற்சி செய்யும். இதை செய்வதினால் அடக்க முடியாத நீர்க்கசிவு தொல்லையை தவிர்க்கலாம். வலுப்படுத்த கெகல் பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். இதை சுயமாக செய்வதை விட டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யவும். இருமினாலே ஏற்படும் கன்ட்ரோல் இல்லாத சிறுநீர்க்கசிவுக்கு கெகல் பயிற்சி சிறந்தது.
அழுத்த நீர்க்கசிவுக்கும் கெகல் பயிற்சி செய்வது நல்லது. எஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) கிரீம் ஆக (அ) மாத்திரையாக கொடுக்கப்படும். சுருக்கமாக சொன்னால் எனப்படும் சிறுநீர்ப்பைக்கான பயிற்சி முறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த பயிற்சிகளின் சாராம்சம்.
சிறுநீர்ப்பை, அதன் செயல்பாடுகள், பாதிப்புகள் இவற்றை பற்றி தெரிந்து கொள்வது.
குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழிப்பதை கடைபிடிக்க வேண்டும். இதை நோயாளிகள் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். போகப் போக, சிறுநீர் கழிக்காத இடைவெளியை அதிகமாக்கிக் கொண்டே போக வேண்டும்.
பயிற்சி பலன் தரவில்லையென்றால் 2 (அ) 3 வாரங்களுக்கு மேல் தொடர வேண்டாம்.
இதர முறைகள்
தாவரங்கள் சில இரசாயன பொருட்களை உண்டாக்குகின்றன. பழங்களில், தானியங்கள், பீன்ஸ், இவற்றில் இந்த பொருட்கள் இருக்கும். இவை பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போன்றவை. செல்களின் பாதிப்பை தவிர்த்து புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் சில பைடோகெமிகல்கள்.
கேரட் போன்ற காய்கறி மற்றும் பழங்களில் கிடைக்கும் பீடா கேரோடின்
தேநீரில் உள்ள பாலிஃபெனால்
முட்டைக்கோஸ், கால்ஃப்ளவர், டர்னிப், ப்ரோக்கலி முதலியன
க்ரீண்டீ
கருமிளகு, இஞ்சி, மஞ்சள், ஜாதிக்காய்
சோயா, நார்ச்சத்தான லிக்னின் – தானியங்கள், பருப்புகள், வேர்க்கடலை, சூர்யகாந்தி விதைகள், கேரட், ப்ளம் பழங்கள், முதலியன
நோனி – இதன் தாவிரவியல் பெயர் – இதன் இலைகள், பட்டை, தண்டு, பூக்கள், பழங்களில் ஏராளமான பைடோ இராசயனங்கள் உள்ளன. சிறுநீர் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும். சிறந்த கிருமி நாசினி. இதில் பல விட்டமின்கள் தாதுப்பொருட்கள் இருப்பதால், சிறுநீர்ப்பை ‘கழுத்து’ தசைகளை வலுவாக்கும். உடலின் நோய்த்தடுப்பு சக்தியை பலமாக்கும்.
ஜாதிக்காய், மஞ்சள், அதிமதுரம் இவைகள் பெண்களின் ஹார்மோனான
ஈஸ்ட்ரோஜனை போல் செயல்பட முடியும்.
ஆயுர்வேத மருந்துகள்
கோக் சூராதி குக்குலு, சந்திரப்ரபா வடீ, புனர்நவ மான்தூர், புனர்நவ அசவா முதலியன.
யோகா
உத்கடாசனா நல்ல பலனை தரும்.
பொது நலம் கருதி வெளியிடுவோர் :– கடலூர் அரங்கநாதன்…
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.