
மன அழுத்தத்தினால் உடல்நலம் பாதிக்கப்படுவது இயற்கை. ஆனால் கண்ணில் ஏற்படும் கண் அழுத்தத்தினால் பார்வை நரம்பு பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இப்பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை சரி செய்வது கடினம் என்கின்றனர் மருத்துவர்கள். பார்வை நரம்பை பாதித்து முற்றிலும் கண்களின் செயல்பாட்டை இழக்கச் செய்வது குளுகோமா என்று சொல்லப்படும் கண் நீர் அழுத்த நோய்.
கண்ணின் செயல்பாட்டிற்கு உதவும் திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இந்நோய் உண்டாகிறது. இந்த திரவ அழுத்தமானது நாளடைவில் பார்வை நரம்பின் முனைகோடி பாகங்களை செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் உண்டு. எனவே நாற்பது வயதுக்கு மேல் கண்ணை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். உலக அளவில் பார்வை இழப்பிற்கான முக்கிய காரணங்களில் கண்நீர் அழுத்த நோய் மூன்றாம் இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 8 கோடி மக்களுக்கு இந்நோய் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர 87 லட்சம் பேர் இருபக்க வாட்டிலும் பார்வை இழப்பிற்கு உள்ளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வயதானவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளையும், கண்நீர் அழுத்த நோய் குறி வைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நோயை ஆரம்பத்திலேயே அறிகுறிகளைப் புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை சரி செய்ய முடியாது என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை. எனவே வந்தபின் தீர்க்க முடியாத கண்நீர் அழுத்த நோயை வருமுன் காப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.