.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/1/17

முன்பு TransAD எனப்பெயரில் சேவையாற்றி தற்போது ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre) என்று பெயர் மாற்றம் பெற்றுள்ள அபுதாபி நகர டேக்ஸி சேவையகம் 7,645 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் கடந்த ஆண்டு சுமார் 73.4 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் மறந்துவிட்டுச் சென்ற சுமார் 8,900 மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 3,353 மணி பர்சுகள், 2,498 கை பைகள், ஏடிஎம் கார்டுகள், கண்ணாடிகள், சாவிக் கொத்துகள், மருந்துகள், 23 குடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றாலும் சுமார் 1,677 பொருட்கள் கேட்பாரின்றி தங்கியுள்ளன.

பயணிகள் மறந்து விட்டுச் செல்லும் பொருட்களில் சுமார் 85 சதவிகிதம் கண்டுபிடிக்கப்படுவதாகவும் எஞ்சியவை பிற பயணிகளால் எடுத்துச் செல்லப்படுவது அல்லது வேறு எங்காவது மறந்து விட்டு வரும் பொருட்களை டேக்ஸியில் தவறவிட்டதாக கருதித் தரப்படும் புகார்களே என டேக்ஸி நிறுவனத்தின் அழைப்பு மைய தலைமை அதிகாரி கவ்லா அல் தஹேரி அவர்கள் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.