அபுதாபி – துபை எமிரேட்டுகளின் எல்லைப்பகுதியான 'ஷேக் ஸூஐப்' (Seih Shuaib) எனுமிடத்தில், ஷேக் முஹமது பின் ஜாயித் சாலையின் நீட்சியாக அமைந்துள்ள இன்டெர்சேஞ்ச் எக்ஸிட் எண்: 311 (E 311) முதல் துவங்கும் இந்த புதிய சாலை அபுதாபியின் சுவைஹான் இன்டர்சேஞ்ச் வரை நிறுவப்பட்டுள்ளது. எனவே, அபுதாபி நகருக்குள் செல்வோர் அல் மஹா காடுகள் (Al Maha Forest), காட்டுப்புற பகுதிகள் (Forestry Green Belt), கலீபா துறைமுகம் (Khalifa Port), கலீபா தொழிற்பேட்டை (khalifa Industrial Zone), அபு முரைக்கா (Abu Mureikha) மற்றும் ஜாயித் ராணுவ முகாம் (Zayed Military Camp) வழியாக சென்றடையலாம். மேலும், அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Abu Dhabi Int'l Airport), யாஸ் ஐலேண்ட் (Yas Island), சாதியாத் ஐலேண்ட் (Saadiyat Island), அல் பலாஹ் (Al Falah), அல் சம்ஹா (Al Samha) மற்றும் வெளிப்புற குடியிருப்பு (Residential Area on the Outskirts of Abu Dhabi) பகுதிகளுக்குச் செல்ல இலகுவான வழியாக அமையும்.
இந்த நெடுஞ்சாலையின் சிறப்பம்சங்கள்:
இந்த புதிய நெடுஞ்சாலையில் 6 இன்டர்சேஞ்சுகள் (Inter-changes), 6 நிலஅடி வழிகள் (Under Passes), இரண்டு புறமும் தலா ஒரு பெட்ரோல் நிலையங்கள் 'ஷேக் ஸூஐபில்' இருந்து துவங்கும் முதலாம் மற்றும் இரண்டாம் இன்டர்சேஞ்சுகளுக்கிடையே அமைந்திருக்கும். அவசரகால உபயோகத்திற்கு என 5 திருப்பங்கள் ('U' Turns)அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இருபுறமும் தலா 4 வழிகளுடன் (4 Tracks) சாலையின் நடுவே 20 மீட்டர் இடைவெளி (Median) விடப்பட்டுள்ளது, இதன் மூலம் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மேலும் இருபுறமும் தலா ஒரு கூடுதல் (Track) வழிகளை அமைத்துக் கொள்ள முடியும். நெடுஞ்சாலை முழுவதும் 300 மீட்டருக்கு ஒன்று என இருபுறமும் 800 மின்விளக்கு கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸூகள் போன்ற அவசரகால வாகனத்தேவைக்காக 6 தனி சாலையோரத் தொகுதிகளும் ( Lay-Bys) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மணிக்கு 8000 வாகனங்கள் இந்த சாலையை கடக்க முடியும். மிருகங்கள் சாலையினுள் குறுக்கே வராதவகையில் இருபுறமும் தடுப்புச் சுவர்களும் எழுப்பப்பட்டுள்ளன.
அவர்கள் சொல்ல மறந்தது:
கட்டாயம் ரேடார் கேமரா இருக்குமுங்க!
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.