உலக நாடுகளில் நல்லாட்சி நடைபெறும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
கல்வி, வருவாய் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளுக்கு இந்த பட்டியலில் முதன்மை இடங்கள் கிட்டியுள்ளன.
அந்த வரிசையில் முதலிடத்தில் பின்லாந்து அரசு தட்டிச் சென்றுள்ளது. கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்த பின்லாந்து இந்த ஆண்டு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. கடந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தே இருந்தது.
3-வது இடத்தில் நோர்வே உள்ளது. 4-வது இடத்தில் நெதர்லாந்து எட்டியுள்ளது.
இதன் பாராளுமன்றம் அமைந்துள்ள ஹேக் நகரில் உலக நாடுகளின் 150 அமைப்புகள் இங்கு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
5-வது இடத்தில் ஸ்வீடன் உள்ளது.
கடந்த ஆண்டைவிடவும் ஒரு இடம் பிந்தங்கி இருந்தாலும் உலக நாடுகள் வரிசையில் நல்லாட்சி நடைபெறும் நாடுகளில் ஆகச்சிறந்த நாடு ஸ்வீடன் என கூறப்படுகிறது.
நல்லாட்சி நடைபெறும் நாடுகளின் தரவரிசை பட்டியல்:
- பின்லாந்து
- நியூசிலாந்து
- நோர்வே
- நெதர்லாந்து
- ஸ்வீடன்
- சுவிட்சர்லாந்து
- டென்மார்க்
- லக்சம்பர்க்
- கனடா
- ஜேர்மனி
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.