19/10/16


ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி..!! : நாடாளுமன்ற உறுப்பினா காோிக்கை!


ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராஸ்பெக்ட் (Prospect) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நியூ சவுத் வெல்ஸ் நாடாளுமன்றத்தில் பேசும் போது, உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் கல்வியும், கலாச்சாரமும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் அவசியம். உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு தமிழ் மொழியை தேசிய பாடத்தித்தில் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் மொழி கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் சமகால மாணவர்களுக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் இது பயனுள்ளதாக அமையும் என ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.