நீதித்துறை மற்றும் சட்டத்துறையின் வாயிலாக பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர பாசிச மத்திய அரசு முயற்சிப்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான யுத்தம் என்று அறிவித்தது ஆல் முஸ்லிம் பெர்சனல் லா போர்டு.
சட்டக் கமிஷனின் கருத்துக் கேட்பை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்த முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அகில இந்திய அளவில் கையெழுத்து இயக்கம் நடத்துமாறு முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இவ்வார ஜும்ஆவில் இருந்து தமிழகத்தில் பல ஜமாஅத்துகளில் இதற்கான குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் சுன்னத் ஜமாஅத்தினர்கள், பள்ளிவாசல் இமாம்கள், மத்ரஸாக்கள், இயக்கங்கள் , பாமர முஸ்லிம்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக மோடியின் குஜராத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆல் இந்தியா முஸ்லிம் பெர்சனல் லா போர்டு இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் பின்னால் உறுதுணையாக நிற்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
நமது தமிழ்நாட்டில் ஜமாஅத்துல் உலமா அமைப்பு இதனை உறுதிசெய்ததோடு, முஸ்லிம் இயக்கத் தலைவர்கள், ஆல் இந்தியா முஸ்லிம் பெர்சனல் லா போர்டு உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் மதச்சார்பற்ற தலைவர்களைக் கொண்டு சென்னை மண்ணடி – தம்புசெட்டித் தெருவில் மாநாடு நடத்தவுள்ளது.
http://www.siasat.com/news/muslim-clerics-support-stand-taken-muslim-personal-law-board-1042905/
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.