இது குறித்து ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைவர் சமித்தா பட்டாச்சாரியா கூறுகையில்: அபிஃப் அகமத் கூகிள் நிறுவனத்தில் வருடத்திற்கு 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். இவரது பணி சிங்கப்பூரில் இருக்கும் கூகிள் அலுவலகத்தில் இருந்து துவங்க உள்ளது என்று கூறினார்.
மேலும் இப்பல்கலைகழத்தின் கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவில் சுமார் 26 பேர் 28.5 லட்சம் முதல் 32.5 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளாதாகவும் சமித்தா பட்டாச்சாரியா கூறினார்.
கூகிள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது குறித்து அபிஃப் அகமத் கூறுகையில்: சகமாணவர்களை விட 3 மடங்கும் அதிக சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் தனது முதல் வேலையை பெற்றதற்கு தனது விடா முயற்சியே முக்கிய காரணம் என தெரிவித்தார். கல்லூரி படிப்பின் இறுதி முடிவுகளுக்காக காத்துக்கொண்டு இருக்கும் அபிஃப் அகமத்; முடிவுகள் வெளியான கையோடு சிங்கப்பூரில் இருக்கும் கூகிள் அலுவலகத்தில் பணியில் சேர உள்ளார்.
பொதுவாக இந்தியாவில் இருந்து கூகிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களுத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அமெரிக்காவில் தான் பணியில் அமர்த்தப்படுவார்கள், ஆனால் அமெரிக்காவில் தற்போது விசா பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளதால், பிற நாடுகளில் இருக்கும் அலுவலகங்களில் மாணவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
- Dinakaran
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.