"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/3/16

பார்ப்பன பாண்டே கூட பார்ப்பன ஆதிக்கத்தினஉண்மையை ஒத்துக்கொண்டாலும்…. சீமான் தமிழன் என்று பார்ப்பனரை முன்னிறுத்தி, இஸ்லாமியனை (உருது பேசுவதால்…) தமிழனில்லை…என்று பிரடகடணப்படுத்தும்
நோக்கமென்ன…?
யார் இயக்குகிறார்….?
யாருக்காய் இயங்குகிறார்…?
மேடையும்,  மைக்கும்,  மேடைக்கு முன்பாக பத்து… நாம் மிழர்கள் தொண்டர்களும்…
இருந்தால் போதும். நரம்புப் புடைக்க திராவிடத்தையும் அதன் தலைவர்களையும்
கிழி கிழியென்று கிழிக்கும் சீமானின் முகத்திரையை நேற்று… தந்தி டிவியில்…
நாசுக்காக… கிழித்தெறிந்தார் பாண்டே..
பாண்டேயின்  அநேக கேள்விகளுக்கு ” அது அப்படியில்ல தம்பி… இப்படியல்ல தம்பி….. நான் சொல்ல வர்றத  புரிந்துக்கொள்ளுங்கள் தம்பி..  நீங்களே…
முடிவு பண்ணிக்குங்க தம்பி… என்று…. பதில் சொல்ல முடியாமல்  அசடுவழிந்த சீமான்….
ஒரு கட்டத்தில்… பாண்டேயை ‘நீ .. ‘ என்று  ஒருமையில்… விளிக்கத் தொடங்கினார்.
பாண்டேயின் கேள்விக்கு சீமான் டர்ர்ர்ர்…ரான தருணங்கள் சில…
1. காங்கிரசுக்காக வாக்கு கேட்டிருக்கேன்… திமுகவுக்காக வாக்கு கேட்டிருக்கேன் மதிமுகவுக்காக வாக்கு கேட்டிருக்கேன்…என நீங்களே சொல்லியிருக்கீங்க..
அதெல்லாம்  கடந்தகால தவறு என ஒத்துக்கொண்டு தற்போது தனிக்கட்சி தொடங்கி
வாக்கு கேட்குறீங்க இதேப்போல ஸ்டாலின், கடந்தகால தவறுகள் இனிமேல் நடக்காது திமுகவுக்கு வாக்களியுங்கள்  என்கிறார். இதில் என்ன தவறு இதையேன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்..?
2. இலை மலர்ந்தால் ஈழம் மலரும்ன்னு ஓட்டு கேட்ட நீங்கள், தற்போது திருந்துவதாக
சொல்வதை மட்டும் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது….?
3. அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என சொல்கிறீர்கள்.
இரண்டிற்கும் மாற்றாக மக்கள் நலக் கூட்டணி என்ற ஒரு அமைப்பு என் கண்
முன்னாலே இருக்கும்போது அவர்களை விட்டுவிட்ட சீமானுக்கு ஏன் நான் வாக்களிக்க வேண்டும்..?
( இதற்கு சீமான் அளித்த ராஜதந்திர, அறிவார்ந்த பதில், ‘ எனக்கு வாக்கு அளித்தால் அளியுங்கள் இல்லாவிட்டால் போங்க..’ )
4. கிருஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தமிழர்கள் என சொல்கிறீர்கள். சரி ஏற்றுக்கொள்கிறேன்.  ஆனால் உங்கள் முப்பாட்டன் முருகன் என்று  சொல்கிறீர்கள். எந்தத்தமிழ் கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் முருகனை முப்பாட்டனாக  ஏற்றுக்கொள்வார்கள்…?
5. தமிழர்களை ஜாதிய ரீதியாகப் பிரித்து,  தொட்டால் தீட்டு என பார்ப்பனர்கள்
பிரித்துப் பார்த்ததால் கிருஸ்துவ மதத்திற்கும்  இஸ்லாமிய மதத்திற்கும்
தமிழர்கள் மதம் மாறிவிட்டார்கள் என இப்பத்தான் சொன்னீங்க.
ஆனால், மிஸ்டர் சீமான், அப்படி தமிழர்களை சாதிய ரீதியாகப் பிரித்த
பார்ப்பனர்களை மட்டும் எப்படி தமிழர்கள் என ஏற்றுக்கொள்கிறீர்கள்…….?
6. தமிழர்களின் மத மாற்றத்திற்குக் காரணம்  பார்ப்பனீயம் என்று நீங்கள்தான் தற்போது பதிவு செய்தீர்கள்.  அப்படிப்பட்டவர்களை மூவாயிரம் ஆண்டுகளாக இங்கு இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழர்கள் என ஏற்றுக்கொள்ள முடியுமா..?
7. ஒரு கட்டத்தில் இந்துக்கள்தான் தமிழர்களா  என்கிற நேரடிக் கேள்விக்கு
சீமான் அளித்த பதில்,…
‘அப்படி இல்லை தம்பி மத, ஜாதி அடிப்படையில் தமிழர்களை வரையறுக்க முடியாது என்று ஒரு போடு போட்டார்.
ஆனால் இதை பாண்டே கவனிக்கத் தவறிவிட்டார். கவனித்திருந்தால், ஜாதி அடிப்படையில்
இல்லை என்றால் எப்படி பெரியாரையும் கலைஞரையும் தமிழர்கள் இல்லை என சொல்கிறீர்கள் என்று சீமானைக் கிழித்து எடுத்திருக்கலாம்.
8. ஜாதிய ரீதியாக தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள்; அவர்களை இனரீதியாக ஒன்றிணைக்க
முயல்வதாக சொல்கிறீர்கள். ஆனால் இன ரீதியாக ஒன்றிணைக்கும்போது தமிழ்பேசும் கன்னடர்கள், தமிழ்பேசும் தெலுங்கர்கள் எல்லாம் சாதிய ரீதியாக தமிழ் சமூகத்திலிருந்து
பிரிக்கப்படுவார்களே அது சரியா…?
9. தமிழ்பேசும் தெலுங்கர்கள் தெலுங்கு மாநாடு நடத்துவதையும், கன்னடர்கள் கன்னட
மாநாடு நடத்துவதையும் வரவேற்பதாக சொல்கிறீகள். அதுபோல ராமதாஸ் வன்னியர் மாநாடு நடத்துகிறார். திருமாவளவன் ஒடுக்கப்பட்டோர் மாநாடு நடத்துகிறார்.
அது சரியென்றால் இதுவும் சரிதானே…..?
10.மைசூரில் வெறிகொண்டு எழுந்த கன்னடர்கள் மத்தியில் நான் தமிழச்சி என
தைரியமாக சொன்னவர் ஜெயலலிதா தொல்காப்பியம் முதல் பல நூல்களை எழுதி,
உங்களைவிட என்னைவிட தமிழுக்கு அதிகமாக தொண்டாற்றிக் கொண்டிருப்பவர் கருணாநிதி.
இவர்களையெல்லாம் தமிழர்களாக ஏற்க முடியாது. சீமானை மட்டும் ஏற்க வேண்டுமா……?
(இதற்கு சீமான்… முழித்த முழியிருக்கே..!…. ஹா..ஹா… உளறவே…. ஆரம்பித்துவிட்டார்.)
11. உலகத் தலைவர்கள் படங்களை எல்லாம் உங்கள் கூட்டங்களில் வைக்கிறீர்கள் சரி.. இந்தமுறை காளிமுத்து படத்தை வைத்தீர்களே.. அது எப்படி..?
( இதற்கு,. காளிமுத்து அவர்கள் ஒரு மொழிப்போர் தியாகி என உளறிய சீமான், கடைசியில்
எனக்குத் தெரியாமல் தம்பிகள் வைத்துவிட்டார்கள் என வழக்கம் போல சமாளித்தார்..)
12. இழிசாதி தலித் என்று உங்கள் வேட்பாளரே பொதுவெளியில் ஒருவரை திட்டியிருக்கிறார். ஏன் அவரை இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை..?
இந்த கேள்விக்கெல்லாம் நேரடியாகவோ அல்லது நீட்டி முழக்கியோ எந்தவொரு தெளிவான பதிலையும் சீமான் சொல்லவில்லை. பரீட்சைக்கு தயாராகாமல் வந்த மாணவனைப் போல
சீமான் முழித்தார்.
சரி…..????????
சீமான் சுத்த தமிழர்தான் என்பதற்கு அத்தாட்சி ஆதாரம் என்ன…..?
(இதை… மத்தவுங்கள பாத்து கேப்பியானு பொங்காதீங்க ஒறவுகளே)
இத்தனை நாள்  ஏமாந்தது போதும் அதனால் இனி ஏமாற தயாரில்லை சீமானின் பரம்பரை
தமிழர்தான் என தக்க ஆதார தரவுகளுடன் நிறுவ வேண்டும் யார் செய்யப்போகிறீர் ஒறவுகளே…?
சீமான் தமிழன்தான் என்பதை நாங்கள் எப்படி நம்புவது….?
(பின்னூட்டம் என்ற பெயரில் பதிவிற்கு சம்பந்தமில்லாததை அநாகரிகமான வார்த்தை பேசினால் நீக்கப்படும்)
தக்க ஆதாரத்தை பதிந்தால் comments ல் முகநூல் நண்பர்கள் 75 %….மாவது….
ஏற்றுக்கொள்ளக்கூடிய  தமிழன் என்ற சான்றை பதிந்தால் இனி சீமானை பற்றி இனி பதிவே வாராது…
இல்லையேல் தொடரும்…
Thanks….
‪#‎குறிஞ்சி_நாடன்‬
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.