.

.
24/2/16

நான் அதிபரானால் இந்தியர்களின் வேலை வாய்ப்பை பறிப்பேன்: டொனால்டு டிரம்ப் அதிரடி
நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை பறிப்பேன் என அதிரடியாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8–ந் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயக கட்சியும், குடியரசுகட்சியும் ஈடுபட்டுள்ளன. ஜனநாய கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டெனால்டு டிரம்ப ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவருக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் கடும் செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் ஒரு டி.வி.க்கு பேட்டியளித்தார்.
அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்களில் 58 சதவீதம் பேர் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்கள் வாழ்க்கை வெள்ளையர்களை விட மிகவும் கீழ் நிலையில் உள்ளது.
சீனா, இந்தியா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அளிக்கின்றன. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வருவேன். அங்கு வேலையின்றி தவிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அவற்றை வழங்குவேன் என்றார்.
டொனால்டு டிரம்பின் இப்பேச்சு இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 69 வயதான டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய நபர். இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார்.
முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடக் கூடாது என பேசி சர்ச்சையில் சிக்கியவர். தற்போது இந்தியர்களுக்கு எதிராக பேசியுள்ளார். தெற்கு கரோலினா உள்ளிட்ட 2 மாகாணங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் வெற்றி பெற்றுள்ளார். 3 மாகாணங்களில் 2–வது இடத்தை பெற்று வேட்பாளர் தேர்தலில் முன்னணியில் இவர் உள்ளார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.