"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/12/15

ஆணையும், பெண்ணையும்
வெறும் பிறப்புறுப்பு மட்டும்
தான் வேறுபடுத்துகிறது
என எண்ணினால், அது
அவர்களின் அறியாமை.

ஆண் என்பவன் பலமாக
படைக்கப்பட்டது பெண்களை காப்பதற்காக என்ற வசனம் கண்டிப்பாக உங்கள் மனதில்
பதிந்திருக்கலாம்.

ஆம், ஆனால், இன்று அது தலைகீழாக இருக்கிறது.
ஆண், என்றால் அவனிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சம்பளம், வேலை, வாழ்விடம் போன்றவற்றை தவிர்த்து ஓர்
ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த தகுதிகள் வெறும் ஆணாக மட்டுமின்றி, சமூகத்தில் உங்களை ஓர் நல்ல
மனிதனாகவும் எடுத்துக் காட்டும் என்பது உறுதி….

பொறுமை
ஒருவரின் பொறுமை தான், அவருக்கான சமூக பெயரை நிலைநாட்டுகிறது.

பொறுமையை இழக்கும் தருணத்தில் தான் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பெயரும், புகழும் வேறு ஒரு நபருக்கு
கிடைக்கப் பெறுகிறது. எனவே,
ஆண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நகைச்சுவை
நகைச்சுவை குணமானது
அனைவருக்கும் தேவையான ஒன்று.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள்.

துன்பத்திலும் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
என்பது சான்றோர் வாக்கு. இது
உங்களது தோல்வியை மறக்கடித்து, மீண்டும் வெற்றிபெற உதவும்.

தன்னம்பிக்கை
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும்
வேண்டிய ஒன்று தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை இல்லமால் வெற்றி பெறுவது என்பது ஒருவகையில் பிச்சையை போன்றது.

இது தன்மானத்தை சார்ந்தது, எனவே, தன்னம்பிக்கையை என்றும் இழந்துவிட கூடாது.

ஆர்வம்
ஏதேனும் ஓர் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும்.

அது விளையாட்டு, தொழில், உணவு, உறவு என ஏதேனும்
ஒன்றில் இருக்க வேண்டும்.

அப்போது தான் வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். எதிலுமே ஆர்வம் இன்றி இருக்கவா
நமக்கு ஆறறிவு?

நேர்மை
ஆண் மகனின் அடையாளம் நேர்மை. இந்த நேர்மை தான் உங்களது தரத்தை வெளிக்காட்டும் கருவி.

எனவே, ஆண் என்றால் அவன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பெண்கள்
விரும்புகிறார்கள்.

மர்மம்
ஒவ்வொரு ஆணிடமும் ஏதேனும் மர்மம் இருக்க வேண்டும். அவனை பற்றி மேலும், மேலும் அறிந்துக் கொள்ள
தங்களை அது தூண்ட வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

அதற்கென கொலை, கொள்ளை போன்ற அளவிற்கு மர்மம் இருந்துவிட கூடாது….!!

கருணை
தன்னிடம் இருப்பதை வாரி இறைத்து வள்ளல் போன்று இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்பவில்லை.

குறைந்தபட்சம் மற்றவர் துயரத்தை கண்டு வருத்தம் கொள்ளும் அளவாவது
உள்ளத்தில் கருணை இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.