"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/10/15

முஸ்லிம் சமூகத்தில் மண முறிவுகள் அதிகரித்து வருகின்றன.
அதுவும் படித்த பட்டதாரிகள் ( ! ) மத்தியில் தான் கூடுதலாக இருக்கிறது என்றால் கல்வியாக பாடமாக இளமை காலம் முழுவதும் நமது பிள்ளைகளுக்கு எதை கற்பிக்கின்றோம் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

முதலாளித்துவ கல்வி வழங்கிய பரிசான Ego என்ற அகங்காரம் தலை தூக்கி நிற்கிறது.

ஆண் / பெண் இருவருக்கும் இறைவன் வழங்கிய இயல்புகள் ஒரு பிரிவு.அது அவர்கள் மீது சுமத்தப்பட்ட இறை கடமைகள் அடிப்படையிலானது குழந்தைகள் வளரும் சூழலில் உண்டாகும் குணாதிசயங்கள் ஒரு பிரிவு.இது அவரவரின் குடும்ப சமூக பொருளாதரா கலாச்சார முறைகள் அடிப்படையிலானது.

இவை இரண்டிற்கும் இடையே அதிக வேறுபாடுகள் உள்ளன.இவை குறித்த சரியான அறிவை குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும்.

இன்றைய எந்த பள்ளிக்கூடமும் பாடத்திட்டங்களும் இந்த அறிவை கொடுப்பதற்கு தயாராக இல்லை.

ஆண் / பெண் இருவரும் முதலில் தங்களை இறைவன் படைத்த நோக்கத்தையும்…. அவன் அருட்கொடையாக தங்களுக்கு வழங்கியுள்ள இயல்பையும் புரிந்து கொள்ள வேண்டும்

பெண்களிடம் மாற்றத்தை விரும்பும் ஆண்கள் முதலில் பெண் குறித்த இந்திய சமூகவியல் சார்ந்த ஆண் ஆதிக்க பார்வையை மாற்றி பரஸ்பரம் மரியாதை கண்ணியம் என்ற இஸ்லாமிய பார்வைக்கு திரும்ப வேண்டும்.

வளரும் சூழலில் உண்டாகும் குணாதிசயங்களை இஸ்லாமிய பயிற்சியை கொண்டு மாற்ற இயலுமே தவிர ஆண் / பெண் படைப்பு இயல்பை மாற்ற இயலாது.

பெரும் பெரும் பட்டங்களை பெறும் ஆண் / பெண் இருவருக்கும் வாழ்க்கை குறித்த இந்த இஸ்லாமிய புரிதல் வழங்கப்பட வில்லை என்றால்…..

முதலாளித்துவ கல்வியில் வெற்றி பெற்று வாழ்க்கையில் தோற்று மன சிக்கலில் உழன்று மறுமையிலும் சோதனைகளையே நமது பிள்ளைகள் சந்திக்கும்
- Cmn Saleem
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.