"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
27/12/16

முஸ்லிம்களாகிய நாம் எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகத்தை ஒரு மார்க்கப் போதகராக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அமேரிக்க இராணுவ வரலாற்றாசிரியர்கள் அல்லாஹ்வின் தூதரை ஒரு இராணுவ தளபதியாக அவருடைய வரலாற்றை எழுத ஆரம்பித்துள்ளது என்பதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அமேரிக்க இராணுவத்துறையின் முக்கியஸ்தளமான பென்டகனில் உள்ள இராணுவ வரலாற்றாசிரியர்கள், கடந்த கால போர்முறைகளை, அவைகளில் உள்ள யுத்த தந்திரங்கள், போர் தளபதிகளின் வாழ்க்கை போன்றவற்றை தொகுத்து, அமேரிக்க இராணுவ வீரர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் அவைகளை நூல்களாக அல்லது சஞ்சிகைகளாக வெளியிடுவார்கள்.

அப்படியான ஒரு சஞ்சிகையே எம்.எச்.கியு என அழைக்கப்படும் “இராணுவ வரலாறு” என்பதாகும். இது இராணுவ வரலாற்று ஆய்வுகளுக்கான சஞ்சிகை. இச்சஞ்சிகையின் வாசகர்கள் பிரதானமாக அமெரிக்கப் படைப்பிரிவினர்களாவர். 22,000 பிரதிகள் விற்பனையாகும் இச்சஞ்சிகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவ வரலாற்றாய்வாளர்களே எழுதுவர். அப்பத்திரிகையில் அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தலைப்பு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“முஹம்மத் - ஒரு தனித்துவ மிக்க இராணுவ அறிவு ஆளுமை” இதுவே அந்த தலைப்பு

இந்த ஆய்வை ரிட்ஷட் கப்ரீல் என்ற வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார். கப்ரீல் அமெரிக்க மத்திய உளவு ஸ்தாபனத்தில் பணி புரிந்தார். அவர் நான்கு நூல்களின் ஆசிரியர். இப்போது கனடாவில் அரச இராணுவக் கல்லூரியில் “வரலாறும் அரசியலும்” என்ற துறையில் விரிவுரையாளராக உள்ளார்.

இதில் பல நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்துகள் உள்ளன. இருந்தாலும் அமேரிக்க இராணுவம் முஸ்லிம்களை கொள்வதற்கு பயன்படுத்தும் யுத்த தந்திரங்கள் இஸ்லாத்தில் இருந்தே பிரதி செய்யப்படுகின்றன என்பது உண்மையாகும்.

அதில் குறித்த ஆய்வாளர் “இறை தூதர் (ஸல்) அவர்களின் தனித்துவமான இராணுவ நோக்கும், சாணக்கியமும் இல்லாதிருந்தால் இஸ்லாம் நிலைத்திருப்பதோ, எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி கொண்டிருப்பதோ, பரவியிருப்பதோ சாத்தியமற்றுப் போயிருக்கும்.”

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இராணுவத் தளபதி என்றவகையில் வெற்றிகரமானவராக இருந்திராவிட்டால் அவர்களது மரணத்தின் பின்னர் பாரசீக, ரோம் என்ற இரு பெரும் சாம்ராஜ்யங்களை வெற்றி கொண்டிருப்பது சாத்தியமில்லை.”

“இறை தூதர் (ஸல்) ஒரு முதல் தரமான இராணுவத் தளபதி. அவர்கள் ஒரு தசாப்த காலத்திற்குள் யுத்தங்களுக்குத் தலைமை தாங்கினார்கள். 18 படையெடுப்புக்கள் நடாத்தினார்கள். வரையறுத்த 38 இராணுவ நடவடிக்ககைகளுக்குத் திட்டம் வரைந்தார்கள்.

'இறைத் தூதர் அவர்கள் வெறும் சாணக்கியம் மிக்க இராணுவத் தளபதியாக மட்டுமன்றி, இராணுவக் கொள்கை வகுப்பாளராகவும், புரட்சிப் போராளியாகவும், நீண்டகால திட்டவரைவு(Strategy) சிந்தனையாளராகவும் இருந்தார்கள். இறைத் தூதர் (ஸல்) உருவாக்கிய உளவுப் பிரிவை விவரிக்கும் ஆய்வு அது அக்காலப் பிரிவில் காணப்பட்ட ரோம, பாரசீக சாம்ராஜ்யங்களின் உளவுப் பிரிவையும் விட மேம்பட்டுக் காணப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

அறபிகளுக்கு மத்தியில் பிரதான நகர்களுக்கு வெளியே சிறு சிறு பாலைவனச்
சோலைகளை அண்டி வாழ்ந்தோரும், நகர்களில் வாழ்ந்தோரும் காணப்பட்டனர். முதற் பிரிவினர் சாதாரண போராளிகளைக் கொண்டிருந்தனர். அடுத்த பிரிவினர் திறமைமிக்க போராளிகளைக் கொண்டிருந்தனர். இறைத்தூதர் அவர்கள் முதற் பிரிவினரை சிறந்த காலாற் படையினராகவும், இரண்டாம் பிரிவினரை தலைசிறந்த குதிரைப் படையினராகவும் அமைப்பதில் வெற்றி கண்டார்கள்.

இஸ்லாத்திற்கு முன்னர் அரபிகள் தம் நேரடி குறுகிய நலன்களில் கவனம் செலுத்துபவர்களாகவே காணப்பட்டனர். எனவே மிகச் சிறு படையெடுப்புகளே
காணப்பட்டன. பொருட்களை சூறையாடிச் செல்லும் சிறு தாக்குதல் நடவடிக்கைகளே காணப்பட்டன. இறைத்தூதர் அவர்களே முதலில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடான இராணுவமாக அமைத்தார்கள்.

கோத்திரம் என்ற குறுகிய எல்லையினுள் அந்த நலன்களுக்காகப் போராடி வந்த அரபிகளை 'உம்மா என்ற கொள்கைவாத விரிந்த எல்லையுள் போராடும் இராணுவமாக இறைத்தூதர் மாற்றினார்கள். இந்த வகையில் அரபிகளின் போர் முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை இறைதூதர் அவர்கள் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார்கள்.

“இறைத்தூதர் அவர்கள் எட்டு இராணுவ சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்தார்கள். அவை அரபிகளின் இராணுவப் படையணியின் அமைப்பிலும் கொள்கையிலும் பாரிய மாற்றங்களை உருவாக்குவதில் பாரிய
செல்வாக்கு செலுத்தின"

என அந்த எட்டு இராணுவ சீர்திருத்தங்களையும் அழகாக விளக்கி, இராணுவ வீரர்களுக்கு பாடம் நடத்துகிறார் ரிட்ஷட் கப்ரீல்.

முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறு எமது எதிரிக்கு இராணுவ பாடம் நடத்துகிறது. ஆனால் நாம் இன்னும் கையில் தஸ்பீஹ் மணியை உருட்டிக்கொண்டும், நபிகள் நாயகத்துக்கு பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டும் இருக்கிறோம்.

நபிகள் நாயகத்தை, போர் உபாயங்களை அறிந்து கொள்ளும் ஓர் இராணுவ பயிற்சியாளராகவும் முஸ்லிம் சமூகம் பார்ப்பது காலத்தின் தேவை.

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.