.

.
5/6/16

மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாசை நகரில் உள்ளது Handmaids of the Blessed Trinity அநாதை இல்லம். இந்த அநாதை இல்லத்திற்கு ரகசியமாக செய்தி சேகரிப்பிற்கு சென்ற Akela Bureau of Investigation (ABI) அமைப்புக்கு அதிர்ச்சியளிக்கும்  தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பின் அறிக்கையில், இந்த ஆனாதை இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் அங்கு பயின்று வரும் முஸ்லிம் சிறுமிகளை பன்றிக்கறி உண்ண கட்டாயப்படுத்தியுள்ளனர் என்றும் அப்படி அவர்கள் உண்ண மறுத்தால் அங்கு பயிலும் மூத்த மாணவிகளை விட்டு கட்டாயமாக உண்ணச் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், “நாங்கள் முஸ்லிம் எனத் தெரிந்தும், இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உன்ன தடை என்று தெரிந்தும் எங்களை செவிலியர்கள் வற்புறுத்தி அதனை உண்ணச் செய்கின்றனர்” என்று கூறியுள்ளாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
இன்னும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்க போகிறேன் என்று ஒரு மானவை கூறியதற்கு அங்கு பணியாற்றும் செவிலியர் எலிசா மற்றும் ட்ரீசா ஆகிய செவிகள் அந்த மாணவியிடம் காவல்நிலையம் சென்றால் கற்பழிக்கப்படுவாய் என்று கூறி அச்சுறுத்தியுள்ளனர். 
மேலும் தாங்கள் மத ரீதியான பாகுபாட்டுக்கு உள்ளகிரோம் என்றும் கிருத்தவ செவிளியர்களாக மாற வற்புறுத்தப் படுகிறோம் என்றும் மாணவிகள் கூறியதாக ABI அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யவும், துணி, பாத்திரங்கள், மற்றும் அறைகளை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர்கள் இதனை செய்ய மறுத்தால் தண்டிக்கப்படிகின்றனர் என்றும் கூறியுள்ளனர். 
கெட்டுப்போன உணவை உண்ண மறுத்ததால் ஒரு முறை தொடர்ச்சியாக ஏழு நாட்கள் அவர்களுக்கு உணவளிக்கப்படவில்லை என்றும் சக மாணவிகள் உணவை பகிர்ந்துகொண்டதால் தான் அவர்கள் உயிர் பிழைக்க நேரிட்டது என்று ABI யின் அறிக்கை தெரிவித்துள்ளது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>