.

.
9/5/16

கடந்த ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா அரசின் சாதனை என்று கடுமையாக விமர்சித்து  ஒரு லிஸ்ட் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டுள்ளது. இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர். காரணம், அப்படியாப்பட்ட டென்ஷன் லிஸ்ட் அது.

வாட்ஸ் அப்பில் அதிமுகவின் சாதனை (வேதனை)களை பட்டியலிட்டுள்ளனர் சிலர். இதோ அந்த பட்டியல்.

* வெற்றி பெற்ற முதல் நாள், ‘உங்கள் அரசு’ என்ற வார்த்தை மறுநாள் நான், ‘எனது அரசு’ என்றானதே.
* சமச்சீர் கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
* பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
* அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது.
* பஸ் கட்டணம் உயர்த்தியது.
* பால் விலையை உயர்த்தியது.
* மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
* கடுமையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
* ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காதது.
* தொழில் வளர்ச்சியை முடக்கியது .
* தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே ஓடியது.
* சட்டசபையை “பெஞ்ச் தட்டும் சபையாக’’ மாற்றியது.
* கரும்பு விவசாயிகளை கதற விட்டது.
* நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
* கிராம, தாலுகா அலுவலகங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
* சாலைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கியது.
* உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து.
* அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
* தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
* கொடநாட்டில் வாசம்.
* பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
* கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
* மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
* இலக்கு வைத்து மது விற்றது.
* தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
* ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
* நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
* மந்திரிகள் மண் சோறு தின்றது.
* தாது மணலை கொள்ளையடித்தது
* ஆவின் ஊழல் .
* கமல்ஹாசனை கலங்கடித்தது.
* விஜய்யை வியர்க்க வைத்தது .
* சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
*கனிமவளத்தை களவாடியது.
* அப்துல் கலாமை அவமதித்தது.
* ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
* 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
* முட்டை, பருப்பு ஊழல்.
* மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
* லோக் ஆயுக்தாவை அமல்படுத்தாதது .
* பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
* நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
* ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
* தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
* திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
* பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
* செவிலியரை சொல்லியடித்தது.
* உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் ஒப்படைத்தது .
* ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
* ஆர்.கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
* செம்பரபாக்கத்தம்மா என விருது வாங்கியது.
* வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
* கோவனை கைது செய்தது.
* பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
* மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
* ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
* விஷன் 2023 வெளியே வராமலே போனது.
* மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>