
வெறுமனே 21.5 இஞ்ச் (54.6 cm)உயரமே உடைய இவர் 2013 ஆம் ஆண்டு உலகின் மிக உயரமான மனிதரான துருக்கியின் சுல்தான் கோசெனுடன் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம் இணைய ஊடகங்களில் வெளியானதை அடுத்து மிகவும் பிரசித்தமடைந்திருந்தார்.
தென் பசுபிக் சமுத்திரத்திலுள்ள அமெரிக்காவின் பகுதியான சமோவா தீவுகளில் சுற்றுலா சென்றிருந்த இந்த குள்ள மனிதர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் பகோ பகோவிலுள்ள லின்டன் பி ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் திடீரெனக் காலமானதாகத் தெரிய வருகின்றது.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 400 Km தொலைவிலுள்ள கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்த டங்கி 2013 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகில் மிகக் குள்ளமான மனிதராக உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப் பட்ட பின்னர் உலகின் பல நாடுகளைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் மிகக் குள்ளமான இளம் மனிதர் என்ற சாதனையையும் சேர்த்தே பெற்றுள்ள டங்கி அவரது குடும்பத்தில் 7 ஆவது நபர் என்பதுடன் இவரது 6 சகோதரர்களும் 2 சகோதரிகளும் என அனைவருமே சாதாரண மனிதர்களைப் போன்ற உயரம் உடையவர்கள் ஆவர்.
இந்நிலையில் தற்போது இயற்கை எய்தியுள்ள டங்கியின் உடலை அவரின் உறவினர்களுக்கு வழங்க முன்னர் சமோவா தீவுகளிலுள்ள மருத்துவ மனை டங்கியின் இறப்புச் சான்றிதழை வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.