12/11/16

2014 பெருநாள் போட்டோ
குர்ஆன் நோக்கம் மனிதனை சிறந்தவனாக்குவதாகும். ஸயின்ஸ் டெக்னாலஜி அறிவியல் தொழில் நுட்பம் இதனை செய்ய இயலாது.
பறவைகளை விட வேகமாக பறக்கலாம். கடலில் மீனை விட வேகமாக நீந்தலாம். நீர் மூழ்கி கப்பல், சூப்பர் சோனிக் விமானம் தொழில் நுட்ப அறிவியல் கற்றுத் தரும்.

பூமியில் மனிதனாக வாழ்வதற்கு குர்ஆன், சுன்னத் கற்றுத் தரும்.
மனிதனின் உச்சி பறப்பதல்ல, நீந்துவதல்ல. மனிதனின் மேன்மை பூமியில் அல்லாஹ்வின் அடிமையாக வாழ்வது, நடப்பதாகும்.

சூரா புர்கான் 25, வசனம் 63 "வ இபாது ரஹ்மானில்லதீன யம்ஷ§ன அலல் அர்னி ஹவ்னன் வ இஜா காத்தப ஹ§முல் ஜாஹிலூன காலூ ஸலாமன்"
இந்த ஆயத்தில் சொல்லப்பட்டவர்கள் சிறப்பான அடிமைகள். அல்லாஹ் தன்னுடன் தொடர்புபடுத்திக் கூறுகிறான், "இபாதுர் ரஹ்மான்."

"பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் சிறப்பானவர்கள்." நெஞ்சை நிமிர்த்தி நடக்கமாட்டார்கள் ஆணவம், அகந்தை இல்லை. பார்வையை தாழ்த்தி, தலையை தாழ்த்தி நடப்பார்கள். நடப்பவர்கள் இன்று குறைவு. மோட்டார் பைக் ஓட்டுபவர் பாதசாரிக்கு வழிவிட வேண்டும். ஆயத் அமுலாகும். தேவையற்ற ஹார்ன் சத்தம் "சைலண்ட் ஜோன்" பகுதியில் கட்டுப்பாடு, சேறு பாதசாரி மீது வீசாமல் அடங்கி நடப்பதாகும்.

விமானத்தில் உட்கார்ந்தாலும் அடக்கத்துடன் மென்மையுடன் அமர்வீர். அல்லாஹ்வின் அடிமைகளின் சிறப்புக் குணம், அடக்கம்.

நிறுவனம் நடத்த தெரியும். ஆனால் சக மனிதரிடம் மென்மையாக நடக்க தெரியாது. நிற்பது, நடப்பது, அமர்வது முதலில் கற்றுக் கொள்வீர்.
ஆயத் தொடர்கிறது....
ஜாஹில்கள் பேசினால் அவர்களிடம் ஸலாம் கூறி விலகி விடவேண்டும் சண்டையிட, விவாதம் புரிய மாட்டார்கள்.

யார் சத்தியத்தை விளங்க ஆர்வப்படுகிறார்களோ அத்ததையோருக்கு புரியவைக்கலாம்.

ஜாஹில்களுடன் விவாதம் செய்தால் அவர்களின் கல்பு இன்னும் கடுமையாகி விடும். உங்களின் நேரம் வீணாகும்.

ஜாஹில் அர்த்தம் சகிப்புத்தன்மையற்றவர்கள். விவாதம் புரிவோர் படித்தவர்களாயிருப்பர்.
ஆனால் வீண் விவாதம் செய்தால் அல்லாஹ்வின் பார்வையில், முட்டாள் ஜாஹில் பட்டம் வழங்கப்படும். அவர்கள் முதன்முதலில் வீண்விவாதம் ஆரம்பித்தாலும் நீங்கள் ஸலாம் கூறி விலகி விடுவீர்.
மூஃமின் நோக்கம் ஹிதாயத்தை வழங்குவதாகும். விரும்புவதாகும். டிஸ்கஷன் விவாதம் புரிய தேவையில்லை. நப்சு டிஸ்கஷன் செய்யும்.
அல்லாஹ்வுக்காக பேசுவதில்லை. மற்றவரை தோற்கடிக்க வேண்டும். பிறரை தோற்கடிப்பதில் நப்சுக்கு இனிமை.

இருவருக்கும் லாபமில்லை. ஷைத்தான் மகிழ்ச்சி கொள்கிறான். விவாதம் ஆதாயம் ஷைத்தானுக்கு மட்டுமே. ஷைத்தான் விவாதம் குறித்து தூண்டிவிடுவான்.

நீங்கள் பெருமைக்காக தொழுதால் ஷைத்தான் மஸ்ஜிதை நோக்கி உங்களை தள்ளி விடுவான், இன்னும் சிலரை மஸ்ஜிதுக்குள் வராமல் தடுத்து மறிப்பான். பெரிய பாவம் நோக்கி தள்ளுவான்.

சுயபெருமை விளங்க மீலாது கொண்டாடுகின்றனர். மீலாது கொண்டாடுவது வாஜீப் அல்ல. பெருமைக்காக கொண்டாடுவோர் தற்பெருமை தற்புகழ்ச்சி பாவத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

ஷைத்தான் சில நேரம் தீன் பெயரில் கெட்டவைகளை நோக்கி தள்ளுகிறான். சிலர் உண்மை பேசுவதாகக் கூறி புறம் பேசுவர்.
மனம் மணமகன். உடம்பு ஜோடனை அலங்காரம் அல்லாஹ் மனதை பார்க்கிறான்.
முக்கியமல்லாத பிரச்னைகுறித்து அதிகம் கவலைப்படுகிறோம். வெளித் தோற்றம், வெளிப்புற விவாதங்கள் அதிகரிக்கின்றன. பைஜாமா நீளம் இன்று விவாதப் பொருள்.
அல்லாஹ் உமது வெளித் தோற்றத்தை பார்ப்பதில்லை. முதலில் நமது இதயம், சிந்தனை மீது கவனம் செலுத்துவோம்.

வசனம் 63, "பணிவுடன் நடப்பார்கள்" பார்வையில் மட்டுமல்ல, இதயத்திலும் பணிவு இருக்கும்.

பொறியியல் படிக்க விரும்பினால் அதற்கான பயிற்சி, நூல், கல்லூரியை அனுகலாம். கலிபா, மனிதனின் அந்தஸ்து பூமியை அமைதி மயமாக்குவதற்கான திறமை, தன்மைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அகீதா, இபாதத், மாமூலாத், அக்லாக், ஆதாப்
அல்லாஹ்வின் கலிபா பிரதிநிதியாவதற்கு ஐந்து விஷயங்களில் ஒன்றையும் விட்டு விடக்கூடாது.
கட்டிடம் கட்ட அஸ்திவாரம் முக்கியம். வாழ்வுக்கு அகீதா கொள்கை மிக முக்கியம்

முஸ்லிம்களின் அகீதா மற்ற சமுதாயத்தினரின் அகீதாவை விட முற்றிலும் வேறுபட்டது. இஸ்லாமிய அகீதா மிக வலிமையானது. இதன் மீது வானமளவுக்கு கட்டிடம் கட்டலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க FB-PAGEயை லைக் செய்யவும் - Muslim Express News 24x7

அல்லாஹ், நபிமார்கள், ஆகிரத், மலக்குகள், தக்தீர்
இவை ஒவ்வொன்றையும் நம்ப வேண்டும் இதற்கான தேவைகள் உண்டு.
வஹ்தானியத், ருபூபியத், உலூஹியத் மீது ஈமான் கொள்ள வேண்டும்.
"வய்ஸ க மிஸ்லிஹி ஷை" அல்லாஹ்வை போல் யாருமில்லை. அல்லாஹ்வுக்கு இருப்பிடம் எதுவும் தேவையில்லை. அர்ஷ் தேவையில்லை. "அல்லாஹ் ஓரிடத்தில் இருக்கிறான்," தவ்ஹீதுக்கு எதிரான கருத்து.

அர்ரஹ்மான் அலல் அர்ஷிஸ்தவா அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான் இது முத்தஷாபிஹாத் ஆயத் வாசிக்கலாம் புரிந்து கொள்ள முடியாது.
காதிர், அலீம், முரீது & இறை சிபத் ஃப ஆலூ லிமா யூரீது தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவான். அல்லாஹ்வை ஒப்புக் கொள்வது, அல்லாஹ்வின் தன்மைகளுடன் ஒப்புக் கொள்வது, ஒப்புக் கொண்டதற்கான பிரதிபலிப்பு அஸர் ஏற்படுவது மூன்றும் தேவை.

சர்க்கரை கூறுவதால் உச்சரிப்பதால் வாய் இனிக்காது. கலிமா மொழிவதால் மட்டும் பயனில்லை. ஆமன்து பில்லாஹ் கூறுவதால் மட்டும் முஸ்லிமாகிவிட முடியாது. அல்லாஹ்வின் குத்ரத் வல்லமை, தக்தீர் விதி இரண்டையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது தேவைகளை திறமை மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறோம். 

முதல் குழந்தைக்கு ஒரு வீடு, இரண்டாவது குழந்தைபிறந்தால் இன்னொரு வீடு வாங்குகிறோம். காப்பீடு லைப் இன்ஷுரன்ஸ் மீது நம்பிக்கை கொள்கிறோம். தக்தீரை நம்புகிறவர் இன்ஷு§ரன்ஸ் ஏராளமாய் முதலீடு செய்ய மாட்டான். முயற்சி செய். ஆனால் முயற்சி மட்டும் செய்வது நம்புவது சரியல்ல விதி வலியது. நம்புவீர்.

தமிழில் - ஆணங்காச்சி ரசூல்
முஸ்லிம் முரசு ஜூலை 2012
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.