"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
17/2/16

‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் தமிழகத்தை வலம் வந்த தி.மு.க பொருளாளர் ஸ்டாலினுக்கு அப்படி ஒரு யோசனை வந்ததே ‘பேசலாம் வாங்க’ என்ற திட்டம்தான்.  தனது தொகுதி மக்களின் குறைகளைக்கேட்க கொண்டு வரப்பட்ட திட்டம் இது. ‘பேசலாம் வாங்க’ என்று அழைத்த, ஸ்டாலினால் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க முடிந்ததா?

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அன்றைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் போட்டியிட்டபோது நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்ந்தது கொளத்துார். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் இப்போதைய சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி நிறுத்தப்பட்டார். பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றிபெற்றார். தேர்தலின்போது இவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா... நிறைவேற்றவிட்டார்களா?

கொளத்துார் தொகுதி ஒரு பார்வை...

ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர், ஜவஹர் நகர், செந்தில் நகர், குமரன் நகர் உள்ளிட்டவை  இதில் பிரதான பகுதிகள்.

“சென்னையில் அதிகமாக புறம்போக்கு நிலங்கள் இருப்பது கொளத்தூரில்தான். அதிக ஆக்கிரமிப்புகள் இருப்பதும் கொளத்தூர் பகுதியில்” என்கின்றனர் ஜி.கே.எம் ஏரியாவாசிகள். முத்துமாரியம்மன் கோயில் குளம், வண்ணாங்குட்டை குளம் ஆகிய இரண்டு குளங்களிலும் தி.மு.க-வினருக்கு நெருக்கமான நபர்கள்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். முத்துமாரியம்மன் கோயில் குளத்தில் 40 ஆயிரம் சதுர அடியை ஆக்கிரமிப்புசெய்து அதில் திருமண மண்டபம் கட்ட முயன்றுள்ளார் தி.மு.க ஆதரவு முக்கியப் புள்ளி ஒருவர். ஜி.கே.எம் காலனி உள்ளிட்ட பல இடங்களில் குடிசை மாற்று வாரியத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரை கையில் வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும் புலம்புகின்றனர்.

பிரசாரத்தின்போது ஸ்டாலின், “பெரியார் நகர் மருத்துவமனை நவீனப்படுத்தப்படும், வட்டத்துக்கு ஒரு சமூகநலக்கூடம் அமைக்கப்படும், கொளத்தூர் தொகுதியில் ஒரு பொறியியல் கல்லூரி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும், உயர்தரமான விளையாட்டுத் திடல் உருவாக்கப்படும், தண்ணீர் பிரச்னை சீர்செய்யப்படும், ரெட்டேரியில் மேம்பாலம், வில்லிவாக்கம் பகுதியில் மேம்பாலம், சிட்கோ நிறுவனம் அமைக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.