17/11/15

சுனாமியின் போது இந்தியாவே
பரங்கிப்பேட்டை மக்களின் சேவைகளை கண்டு வியந்த தருணம் அது.

இதுபோன்ற பல தருணங்களில் நேற்றைய தினமும் ஒன்று.

முதல் புயல் அடித்த மறுநாள்
காலையே ஊர் முழுதும் பலரின்
உழைப்பால் வைக்கப்பட்ட மரக்கன்றுகளை ஒரு நாள் முழுக்க சரி செய்தனர் அடுத்து நேற்று அரசாங்கத்தின் துணை
இல்லாமல், ஊரில் உள்ள
தன்னார்வலர்களும் , இளைஞர்களும் இணைந்து பணம் வசூலித்து மழையால்
பதிக்கப்பட்ட மக்களுக்காக மழையில் உணவு தயாரித்து கிட்டத்தட்ட 1500 பொட்டலங்களை வீடுவீடாக சென்று விநியோகம் செய்தனர்.

இவர்கள் யாரும் தேர்தலில் நின்று பதவியடைய போவதில்லை,
மனிதநேயத்தோடு இறைவனின் பொறுத்ததிற்காக மட்டுமே உழைத்த எமதூர் மக்களை எண்ணி பெருமிதம்
கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மதவேறுபாடு பாராமல்
அனைவருக்கும் வழங்கியது
குறிப்பிடத்தக்கது.
-பொடியன் (முகனூல் பக்கம்)

நாட்டில் மதத்துவேச கருத்துக்களை பகிர்ந்து மக்கள் மத்தியில் குழப்பத்தையும், மதவெறியையும்
ஏற்படுத்தி வரும் சிலர் மத்தியில் மதநல்லினக்கத்துடன் அனைவருக்கும் உணவு வழங்கி உதவிய இந்த மக்களை
வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக பாராட்டுகிறோம்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.