24/4/15

நம் நாடு 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது நம் மக்கள் தொகையில் 12 % பேர்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் கைநாட்டுதான்.

பின்னர் பல்வேறு காரணங்களால் இந்நிலை மெல்ல மாறியது. எழுத்தறிவு பெற்ற இந்தியர்கள் 74 % பேர் என 2011- மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிவித்துள்ளது. இது தற்போது உலக அளவில் மனிதர்களிடம் உள்ள எழுத்தறிவின் சராசரியைவிட 10 % குறைவுதான். அதாவது இன்றைய உலகில் இந்தியாவில்தான் எழுத்தறிவு பெறாதவர்கள் அதிகம் உள்ளனர்.

கடந்த 1986ம் ஆண்டில் தேசிய கல்வி கொள்கை ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்கியது. மேலும் முறைசாரா கல்வி முறையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் சீராக கல்வி பயில வழிவகுத்தது. 1991ம் ஆண்டு பேராசிரியர் தாவே அறிமுகப்படுத்திய குறைந்த பட்ச கற்றல் அளவு மூலம் ஆரம்ப பள்ளிக்கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது. 1992ம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கை கரும்பலகை திட்டம் மூலம் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வழி வகுத்தது.

தேசிய எழுத்தறிவு குழு, வயது வந்தோர் குழு கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எல்.ஏ) திட்டத்தின் மூலம் ஆரம்பக் கல்வியை உலகளாவிய அளவில் மேம்படுத்த சமுதாயத்தின் ஒத்துழைப்போடு முயற்சிகள் எடுத்து நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

பள்ளிக்கு செல்லக்கூடிய வயதில் அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். சர்வசிக்ஷா அபியான் திட்டத்தின்படி அனைத்து குழந்தைகளுக்கும் கடந்த 2010ம் ஆண்டிற்குள் ஆரம்பக்கல்வி வழங்க வேண்டும். ஆண், பெண் எழுத்தறிவு மற்றும் சமூக இடைவெளி குறைக்கப்பட வேண்டும். மக்கள் தொகை 300க்கும் மேல் உள்ள ஊர்களில் ஆரம்ப பாடசாலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் எல்லாம்அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது ஆரம்பப்பள்ளி வகுப்பறைகளில் மொபைல் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தி குழந்தைகளின் ஆரம்பகால எழுத்தறிவு திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது பால்கர்கள் பலரும் அநாயசமாக பயன்படுத்தும் மொபைல்களில் கல்வி அப்ளிக்கேஷனை பயன்படுத்தி அக் குழந்தைகளின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கவும் மற்றும் ஈடுபாட்டை கொண்டு வர முடியும் என்று ஆய்வு ஆசிரியர் சூசன் நியூமன், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் குழந்தை பருவம் மற்றும் கல்வியறிவு கல்வி பேராசிரியர் கூறியுள்ளார்.

எங்கள் ஆய்வின் நோக்கம் அப்ளிக்கேஷன் மூலம் குழந்தைகளின் கற்றல் ஆற்றலை ஊக்குவிக்கவும், துரிதப்படுத்தவும் முடியும் என்று கூறியது போல இந்த ஆய்வின் முடிவில் நிரூபணமாகியுள்ளது என்றும் நியூமன் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள், குறைந்த வருவாய் கொண்ட ஆரம்பபள்ளி குழந்தைகளுக்கு ஹோமர் பயன்பாட்டின் மூலம் கற்றல் என்று அழைக்கப்படும் கல்வி அப்ளிக்கேஷனை பயன்படுத்தி அவர்களின் திறனை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஆய்வு ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபாட் அப்ளிக்கேஷன் குழந்தைகளை கல்வியில் ஈடுபடுத்த வார்த்தை ஒலிகள் மற்றும் கதை புத்தகம் படித்தல் ஆகியவை ஒருங்கிணைத்து இந்த அப்ளிக்கேஷனை வடிவமைத்துள்ளனர். 10 வகுப்பறைகளில் உள்ள மொத்தம் 148 ஆரம்பபள்ளி குழந்தைகளுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் தினசரி ஹோமர் பயன்பாட்டின் மூலம் கற்றல் பயன்படுத்தப்படும் குழந்தைகளுடன் மற்றொரு அப்ளிக்கேஷன் பயன்படுத்தும் குழுவுடன் ஒப்பிட்டு குழந்தைகளின் பேச்சொலி விழிப்புணர்வின் மாற்றங்கள் அளவிடப்பட்டு ஆரம்ப கல்வியறிவில் பல சோதனைகள் மூலம் மதிப்பிட்டனர் ஆராய்ச்சியாளர்கள். பேச்சொலி விழிப்புணர்வில் சொற்களை உருவாக்கும் ஒலிகளை உணரும் திறனை, பின்னர் வாசிப்பு திறன் ஆகியவை முக்கியமாக கணிக்கப்பட்டது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.