.

.
16/2/14


அஜ்மான் : ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்று அஜ்மான். அஜ்மான் கடற்கரையின் மிக அருகாமையில் அமைந்துள்ளது அஜ்மான் அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகம் அமீரக மக்களின் பழங்கால வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர பிற நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கட்டணமாக ஐந்து திர்ஹமும், பள்ளி மாணாக்கர்களுக்கு ஒரு திர்ஹமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த அஹ்மது அல் சுவைதி, சிக்கல் ஜலால் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த மும்பையைச் சேர்ந்த தமிழர் ஞானப்பிரகாஷ் அமீரக மக்களின் வாழ்க்கையினை அறிந்து கொள்ளும் வகையில் அஜ்மான் அருங்காட்சியகம் உதவிடுவதாக குறிப்பிட்டார். மேலும் அமீரகம் மற்றும் இந்திய வரலாற்றுக்கிடையே பல்வேறு ஒற்றுமைகளையும் அறிய முடிவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அருங்காட்சியகத்தை அமீரக வாழ் தமிழ் மக்களும் கண்டு களித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்: முதுவை ஹிதாயத் 
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.